சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் 60 சதவீதம் உயர்வு

சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் 60 சதவீதம் உயர்வு
X

பைல் படம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணங்கள் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் புறநகர் பகுதிகளில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் தினமும் இருவேளை பயணம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ஏற்கனவே கார் வாடகை மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

சென்னையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளிலுமே ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பஸ்களில் காத்திருந்து சென்றால் நீண்ட நேரம் ஆகும் என்பதாலும், ஆட்டோக்களை விட கட்டணம் குறைவு என்பதாலும் மக்கள் அதிகளவில் ஷேர் ஆட்டோகளையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் புறநகர் பகுதியில் ஷேர் ஆட்டோ கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. 60 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோ கட்டணம் பொதுமக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தற்போது தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Tags

Next Story