சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் சி.வி கணேசன் பங்கேற்பு
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா சூழ்நிலை காரணம் காட்டி நிறுவனங்கள் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து 8 மணிநேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும். 8 மணிநேரத்திற்கு மேலாக பணிகள் செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தினால் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீர ராகவ ராவ் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu