சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!
X

ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னையில் பாலியர் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது 5 பெண்கள் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்டடுள்ளார். இவர் மீது மேலும் பல பெண்கள் புகார்களை அளித்த வண்ணம் உள்ளனர். புகார்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் பல மாணவிகள் இவர் மீது புகார் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா