சட்டபேரவை கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு

சட்டபேரவை கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு
X

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டபேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு.

தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்.

ஜூன் 21 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவருடன் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியும் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவைத் தலைவர் அப்பாவு, 'சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுப்பது மரபு. அதன்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் கண்டிப்பாக வருவதாகக் கூறியிருக்கிறார்.

கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பில்லாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும். மேலும் கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
crop opportunities ai agriculture