அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
கே.கே.நகரில் விருகம்பாக்கம் தொகுதிகுட்பட்ட பாஜக,அதிமுக, தேமுதிக,அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திராவிட முன்னேற்றக்கழகத்தில் மருத்துவத்துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான பிரபாகர ராஜா மற்றும் பகுதி செயலாளர்கள் கண்ணன், ராஜா ஏற்பாட்டில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பிரபாகர ராஜா அவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து திமுக இணைய விரும்புவதாக தெரிவித்தார் முதல்வர் முன்னிலையில் இணைய செய்யலாம் என்றேன் ஆனால் கொரோனா காலம் என்பதால் எளிமையாக இதனை நடத்தியுள்ளார்கள்..
நீங்கள் மாற்றக்கட்சியில் எவ்வாறு செல்வாக்காக இருந்தீர்கள் என்பதை அறிவோம் , நீங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி 10ஆண்டுகளுக்கான திட்டத்தை அறிவித்து அனைவரும் ஏற்றுக்கொள்கிற தலைவராக திமுக தலைவர் முதல்வர் உள்ளார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.
விருகம்பாக்கத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா முன்னிலையில் பகுதி செயலாளர்கள் கண்ணன் , ராஜா ஏற்பாட்டில் அதிமுக, பாஜக, தேமுதிக, அமமுக என பல்வேறு கட்சிகளிலிருந்து பொழுக்குழு உறுப்பினர் அவைத்தலைவர் , வட்ட ,பகுதி கழக நிர்வாகிகள் தமிழ்நாடு. முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைகிறார்கள்
திட்டமிட்டப்படி சுகாத்துறை செயலாளர் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை செலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசி , எம்ய்ஸ் , புதிய மருத்துவக்கல்லூரி கள் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தவுள்ளோம்..
தடுப்பூசிகள் இம்மாதத்திற்கு 71லட்சத்தில் 10லட்சம் வந்துள்ளது.. விரைவாக தடுப்பூசிகளை தரவேண்டும் என பேசி வருகிறோம்..
தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பெயரில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இருந்தோம் அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக புதிய அமைச்சர் பதியேற்றவுடன் சந்திப்போம்.
புதிய மருதுவக்கல்லூரிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஒன்றிய சுகாதாரத்துறை கூறியபடி பணிகள் நடைபெற்று வருகிறது..
ஊரடங்கு காலத்தில் நீரழிவு ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் கொடுத்த ஆலோசனையின் பெயரில் வீடுகளுக்குச் சென்று மாத்திரைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது
முதல் கட்டமாக தமிழகத்தில் 20 லட்சம் நபர்களுக்கு 20 லட்சம் நபர்களை கண்டறிந்து அவர்கள் மாத்திரை வழங்குவதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள நீரிழவு , இரத்தழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து வீடுகளுக்கே சென்று மருந்துகள் கொடுக்கும் பணிகளை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu