அதிமுகவுக்கு யாரும் தனியுரிமை கோர முடியாது, சசிகலா ஆவேசம்

சசிகலா (பைல் படம்)
தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வரும் சசிகலா, நடிகர் குண்டு கல்யாணம் திருப்பூரை கிரிதரன், புதுக்கோட்டையை ராமையா, மதுரை ராஜசேகரன், அம்மாபேட்டை ஜமுனாராணி ஆகியோரிடம் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
கட்சியின் மீது தீவிர பற்று கொண்டு இருக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை யாரும் தனி உரிமை கோர முடியாது. இது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி நிச்சயம் தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்த கட்சியை நல்லபடியாக வழிநடத்தி அம்மா நினைத்தது போல் நல்லபெயர் வாங்கிக் கொடுப்போம். நிச்சயம் நான் அதை செய்வேன். கட்சியை மீட்டெடுத்து நல்லாச்சி தருவேன்.
எனவே தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக நான் வருவேன். கட்சியை நல்லபடியாக வழி நடத்துவோம். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து பகுதிகளிலும் உள்ள தொண்டர்களை விரைவில் சந்திக்க இருக்கிறேன். தொண்டர்களின் மனசு படி நான் நிச்சயம் செய்வேன்.
அதிமுகவைப் பொறுத்தவரை இது தொண்டர்களின் கட்சி. சிலர் தவறான போக்கை கடைப் பிடிக்கிறார்கள் அது தவறு. யாரும் மனதை விட்டு விட வேண்டாம்.
கட்சிக்குள் பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை என்று எல்லோருமே சொல்கிறார்கள். எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம் எல்லாவற்றையும் சரி செய்திட நான் இருக்கிறேன். ஆகவே தொண்டர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu