சின்ன கலைவாணருக்கு நடிகர் நடிகைகள் இரங்கல்

சின்ன கலைவாணருக்கு நடிகர் நடிகைகள் இரங்கல்
X

நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நடிகர்களான சூர்யா, கார்த்தி, சசிகுமார், அர்ஜுன், மன்சூர் அலிகான் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ்,கீர்த்தி சுரேஷ், திரிஷா நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, ரமேஷ் கண்ணா, மயில் சாமி, சந்தானம், யோகிபாபு, பாலாஜி, அப்புக்குட்டி, இயக்குனர்களான சங்கர், செல்வமணி மற்றும் மேலும் பலர் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!