கோயம்பேட்டின் சாலைகளில் வசிப்போர் மாநகராட்சி பள்ளிகளில் தங்கவைப்பு

கோயம்பேட்டின் சாலைகளில் வசிப்போர் மாநகராட்சி பள்ளிகளில் தங்கவைப்பு
X

விருங்கம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

கோயம்பேடு நடைமேடையில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையும் மூடப்பட்டதன் காரணமாக அங்கு மூட்டை தூக்குபவர்கள், காய்கறி வண்டிகளை இழுபவர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர்.

அதில் பலர் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் கோயம்பேடு பகுதியில் சாலை ஓரங்களிலும், பாலங்களுக்கு அருகிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் விருங்கம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கோயம்பேடு பகுதியில் வீடின்றி தங்கியோர் 150 மேற்பட்டவர்களை மாநகராட்சி பள்ளிக்கு தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் பேருந்துகள் மூலம், வீடற்றோர் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பொது முடக்கம் வரை மாநகராட்சி பள்ளியில்

வீடற்றோர் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், உணவு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் அவர்களுக்கு செய்து தரப்படும் என்றும் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா கூறியுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!