சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 5 கிமீ தொலைவை 30 நிமிடங்களில் கடந்து சாதனை
. 5 கி.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓடி கடந்ததே அந்த மகத்தான சாதனையாகும்.Indian Book of Records இவரது சாதனையை அங்கீகரித்து இச்சிறுவனுக்கு சான்றிதழும்,பதக்கமும் தந்து கவுரவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 5 கி.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓடி கடந்து இந்திய அளவில் சாதனை புரிந்து.இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் இடம் பிடித்த சிறுவனைவிருகை திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா பாராட்டினார்.
சென்னை, ஆழ்வர்திருநகர் பாரதி காலனி அனெக்ஸ்-ஐ சேர்ந்த சஷாந்த் என்கிற 6 வயது சிறுவன் இந்திய அளவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
5 கி.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓடி கடந்ததே அந்த மகத்தான சாதனையாகும்.Indian Book of Records இவரது சாதனையை அங்கீகரித்து இச்சிறுவனுக்கு சான்றிதழும்,பதக்கமும் தந்து கவுரவித்துள்ளது.
தனது 3-ம் அகவையிலிருந்தே பயிற்சியாளர் திரு.விவேகானந்தன் அவர்களிடம் ஓட்ட பந்தய வீரனாக வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி எடுத்து வரும் இவர் மென்மேலும் இந்த துறையில் சிறந்து விளங்க இது மாபெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்கிறார். மேலும் இந்த சாதனையை தன் தாயாருக்கும், பயிற்சியாளருக்கும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu