ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு

ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு
X

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

கொரோனா விதிமுறைகளை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தியதாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளுக்கு புறம்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கிற்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், முழு பொதுமுடக்க விதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது, ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக் கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!