மார்கழியில் மக்களிசை மேடையில் பாடிய சித் ஸ்ரீராம்
சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.
மார்கழியில் மக்களிசை மேடையில் சித் ஸ்ரீராம் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடத்திய நிகழ்ச்சி மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கோலாகலத் திருவிழாவாக "Hip Hop & Rap" என பெயரிடப்பட்டு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம், இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிக பெருமையாக இருக்கிறது. விழாவை நான் வெகுவாக ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேடையில் பாடி மகிழ்வித்தார். கவிஞர் தனிக்கொடி மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருப்பாதாகக் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஓவியர் அனிதா ரஞ்சித் , இசைக்கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் சிறப்பாக பாடினார்கள் என்று கூறினார். நடிகை ரித்விக்கா மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu