10,11,12ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்க முன்னுரிமை வழங்கப்படும் : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
இந்தியத் திருநாட்டின் 73 ஆவது குடியரசு தினவிழாவையொட்டி பாரத சாரண சாரணியர் தமிழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடியேற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 12 தேசிய விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதோடு 50 ஆண்டுகளுக்கும் மேல் பாரத சாரண சாரணிய இயக்கத்தில் பணியாற்றுவதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ந.முத்துகிருஷ்ணன் என்பவர்களுக்கும் கே.அலமேலு என்பவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
ஆளுநர் குடியரசு தின வாழ்த்துரை பற்றிய கேள்விக்கு, நீட்-டை நியாயம் படுத்தும் விதமாக தான் ஆரம்பத்திலிருந்து ஆளுநர் பேசி வருகிறார்/ ஆனால் நீட் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆளுநர் உடனடியாக நீட் மசோதா அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு துறை ஓடி வருகிறது. அதை படி படியாக செய்வோம். இரு மொழி கொள்கையில் தான் நம் கொள்கை. அதில் என்றும் பின் வாங்க மாட்டோம். அது அவருடைய கருத்து.
10,11,12 அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம். அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுத் தேர்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும்,ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும்...
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு முன்பு பொதுத்தேர்வுகள் கேள்வித்தாள் எப்படி நடைபெற்றது அப்படியே இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடைபெறும்..
அரசு பள்ளிகளில் 3,330 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது, அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu