அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி: சென்னை ஆணையர் அறிவிப்பு!

அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி:  சென்னை ஆணையர் அறிவிப்பு!
X

அம்மா உணவகத்தில் உணவு வழங்கும் காட்சி.

அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் காய்கறி விற்பனையாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை குறித்த விவரங்கள் இதன் மூலம் அறியலாம்.

சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் எண், பெயர், விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் நடமாடும் காய்கறி வாகனங்களில் மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!