விமானத்தில் ரூ. 44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல் - ஒருவர் கைது

விமானத்தில் ரூ. 44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல் - ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கப்பசை. 

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44.25 லட்சம் மதிப்புடைய 990 கிராம் தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து ஃபிளை துபாய் சிறப்பு பயணிகள் விமானம், நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசர் அராபத் (32) என்ற பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.

ஆனால், சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, முழுமையாக சோதனையிட்டனர். அவருடைய உள்ளாடைக்குள் பாலிதீன் கவரில் சுத்தப்பட்ட பார்சல் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பாா்சலை திறந்து பார்த்தனா். அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

அந்த பார்சலில் இருந்த, 990 கிராம் எடையுடைய தங்க பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 44.25 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story