/* */

போதைப் பொருட்களை வரவழைத்தவா்களுக்கு சுங்கத்துறையினா் வலை வீச்சு

சென்னை சுங்கத்துறையினர் போதைப் பொருட்களை வரவழைத்தவர்களை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

போதைப் பொருட்களை வரவழைத்தவா்களுக்கு சுங்கத்துறையினா் வலை வீச்சு
X

சென்னை விமனாநிலைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள்.

சென்னை சா்வதேச விமானநிலைய காா்கோ பிரிவில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த கொரியா் பாா்சல்களை சங்கத்துறையினா் ஆய்வு செய்து சோதனையிட்டனா்.அப்போது நெதா்லாந்து, கனடா நாடுகளிலிருந்து வந்திருந்த 5 கொரியா் பாா்சல்களில் பிறந்த நாள் பரிசு பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அதோடு முகவரிகளும் தெளிவாக இல்லை.இது சுங்கத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னை மற்றும் திருச்சி முகவரிகளுக்கு வந்திருந்த 3 கொரியா் பாா்சல்களை பிரித்து பாா்த்தனா்.அந்த பாா்சல்களில் 63 போதை மாத்திரைகள் இருந்தன.இந்த மாத்திரைகள் அனைத்தும் மிகவும் விலை உயா்ந்தவைகள்.ஒரு மாத்திரையே ரூ.4 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து போதை மாத்திரைகளை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.

இதையடுத்து கனடாவிலிருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த மற்றொரு பாா்சலை பிரித்து சோதனையிட்டனா்.அதனுள் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா 57 கிராம் இருந்ததை கண்டுப்பிடித்து கைப்பற்றினா்.

அதோடு நெதா்லாந்து நாட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருந்த பாா்சலை சோதனையிட்டனா்.அதில் மெத் கிரிஸ்டல் என்ற விலை உயா்ந்த போதை பவுடா் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதையும் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இந்த போதை மாத்திரைகள்,போதை பவுடா்,கஞ்சாவின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.4 லட்சம்.ஆனால் இந்தியாவில் இதன் மதிப்பு சுமாா் ரூ. 8 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறையினா் போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் சுங்கத்துறை சட்டத்தின் படி வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்து கின்றனா்.

Updated On: 11 Dec 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...