சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம்
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த காட்சி.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர்.

கருப்பு பூஞ்சை பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!