மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கம்
சென்னை : மெட்ரோ ரயில் சேவைகள் முதல் கட்டமாக நாளை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். தேவைக்கு ஏற்ப நேரம் மாற்றம் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் விமானநிலையம்-விம்கோநகர் வரையிலும், பச்சை வழித்தடத்தில் பரங்கி மலை மெட்ரோ-டாக்டர் எம்ஜி ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
இரண்டு வழித்தடத்திலும் நாளை முதல் நெரிசல் நேரங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் இல்லாத வழக்கமான நேரங்களில் 10 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும்.
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் வருகை, வெளியேறும் பாதைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் , காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளியை குறிக்கும் குறியீடுகளை பயணிகள் பின்பற்ற வேண்டும்.
மெட்ரோ ரயிலில் பயணிப்போர், ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu