சென்னை: தள்ளுவண்டிகளில் மளிகை பொருட்கள் விற்க வியாபாரிகளுக்கு அனுமதி!
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுவதால் மளிகைக் கடை வியாபாரிகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறுகையில், மளிகைப் பொருள் விற்பனைக்காக மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்ற 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு மற்றும் பதாகைகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட வாா்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளா் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளா்களுக்குத் தேவையான பொருள்களை இன்று முதல் (மே 31) நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் 'நம்ம சென்னை' செயலியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் அங்காடியின் பெயா், தொலைபேசி எண், வாா்டு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பா் மாா்க்கெட் என வகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu