சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர் கைது!

சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர் கைது!
X

ரெம்டெசிவிர் மருந்து

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்து நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தற்போது பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.இதனை தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த எஸ்ஜிஎன் ஃபார்மசீயூடிகல் நிர்வாகி செங்குட்டுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரிடமிருந்து 30 ரெம்டெசிவர் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு குப்பியை 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
crop opportunities ai agriculture