சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!
X
சென்னையில் வருவாய் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான வருவாய்த் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்பாக கடந்த வாரத்தில், 59 வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 31 அலுவலர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், ஒன்பது ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!