சென்னை: தொலைபேசியில் 5. 80 லட்சம் மருத்துவ ஆலோசனை - ஆணையர் அறிவிப்பு

சென்னை: தொலைபேசியில் 5. 80 லட்சம்  மருத்துவ ஆலோசனை - ஆணையர் அறிவிப்பு
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

சென்னையில் 5.80 லட்சம் தொலை பேசி அழைப்புகளில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறினார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும் மனநல ஆலோசனை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பயிற்சி மருத்துவர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே மாதம் 13ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயிற்சி மருத்துவர்கள் வாயிலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல் நிலை மற்றும் மனநலம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தொடர்ந்து ஐந்துநாட்கள் காய்ச்சல் வந்த 1,621 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு விவரம் கேட்ட 165 நபர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் நல சிரமங்கள் இருப்பதாக தெரிவித்த 260 நபர்களுக்கு உடல்நல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்