உக்ரைனுக்கு மீண்டும் செல்ல பயமாக உள்ளது: சென்னை மாணவி பேட்டி
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜவினர் வரவேற்பளித்தனர்.
உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் அங்கிருந்து மாணவர்களை மீட்கும் பணி கடந்த 26ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. மத்திய அரசின் முயற்சியால் மாணவர்கள் உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வந்தடைந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிய அவர்களை பாஜகவினர் மற்றும் பெற்றோர் வரவேற்பளித்தனர்.
அப்போது சென்னை வந்தடைந்த மாணவி நேத்திக்கா லட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாடு திரும்பியது சந்தோசமாக இருந்தாலும் இந்தப் பதட்ட நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு செல்வது பயமாக உள்ளது. எனவே எங்களது படிப்பு தொடர இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பு தொடர மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். தற்போது போர் நிறுத்தி தான் உள்ளது போர் முடிந்தது என அறிவிக்கவில்லை.
மீண்டும் போர் ஆரம்பிக்கும் நிலை எப்போதும் உள்ளது. 6 மாதம் ஆன்லைன் வகுப்பு செமஸ்டர் பயின்று மீண்டும் உக்ரைனுக்கு செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு பயமாக உள்ளது. உக்ரைனில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்தில் மருத்துவம் படிப்பை தொடர வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாகவே நாங்கள் உக்ரைனுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீட் தேர்வு தேர்ச்சி பெற்று தான் நாங்கள் உக்ரைனுக்கு சென்று மருத்துவம் படித்து வருகிறோம்.
தமிழகத்தில் கட்டணம் அதிகம்
மிதுன் முத்துக்குமார் பேசுகையில், பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது 36 மணி நேரம் ரயில் பயணம் செய்து, பின்னர் விமானத்தில் டெல்லி வந்து, சென்னை திரும்பி உள்ளோம். உக்ரைனுக்கு சென்று படிக்க, தமிழகத்தில் கட்டணம் அதிகமாக இருப்பதாலேயே நாங்கள் உக்ரைனில் மருத்துவம் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu