சென்னை அயனாவரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

சென்னை அயனாவரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன்  நகை திருட்டு
X

சென்னை அயனாவரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டிய பிரோ

மீனம்பாக்கத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் திருடு போனது தெரிந்தது

அயனாவரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை 5 லட்சம் ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை அயனாவரம் ராமநாதன் தெரு பகுதியை சேர்ந்தவர் யாழினி தேவி (49 ). இவரது கணவர் ஜெய்சங்கர் இறந்துவிட்டார். யாழினி தேவி ரயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பத்து வருடத்திற்கு முன்பு இவர் வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் 5 லட்சம் ரூபாய் போட்டு வைத்திருந்தார். அதனை கடந்த மாதம் வங்கியில் இருந்து எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

நேற்று காலை ஒன்பது மணியளவில் மீனம்பாக்கத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென் றுவிட்டு இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் பணம திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் அங்கு சென்ற அயனாவரம் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை எடுத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்..

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!