துபையிலிருந்து இசைக்கருவிக்குள் வைத்து கடத்தி வந்த 110 கிராம் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து இசைக்கருவிக்குள் வைத்து  கடத்தி வந்த 110 கிராம் தங்கம் பறிமுதல்
X

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த துபையிலிருந்து கடத்தி வந்த தங்கம்

கீபோர்டை திறந்து பார்த்து சோதனை யிட்டபோதுஉள்ளே 40 க்கும் மேற்பட்ட தங்க ராடுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்

துபையிலிருந்து இசை கருவிக்குள் மறைத்து வைத்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புடைய 110 கிராம் தங்க ராடுகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து,கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

துபையிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் 117 பயணிகள் வந்தனா். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பயணிகளை கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

அதில், சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணியின் உடமைகளை சோதனையிட்டனர். அவர் துபாயில் இருந்து பியானோ கீபோர்டு என்ற இசைக்கருவி கொண்டு வந்திருந்தார். அதிகாரிகள் சந்தேகத்தில் அந்த கீபோர்டை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதனுள் 40 க்கும் மேற்பட்ட தங்க ராடுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். அந்த தங்க ராடுகளின் மொத்த எடை 110 கிராம்.சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனர். அதோடு அவர் கடத்தி வந்த தங்கம் ராடுகள்,கடத்தலுக்கு பயன்படுத்திய கீ போர்டையும் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!