சென்னை மாநகராட்சி பள்ளியில் காணொலி மூலம் கொரோனா விழிப்புணர்வு

சென்னை மாநகராட்சி பள்ளியில் காணொலி மூலம் கொரோனா விழிப்புணர்வு
X

பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் காணொளி காட்சிகள் திரையிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணா சாலை அருகே உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் காணொளி காட்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணா சாலை அருகே உள்ள தாயார் சாதிப் தெருவில் இயங்கிவரும் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் காணொளி காட்சிகள் திரையிடப்பட்டது.

இதில் கொரோனா தடுப்பு சம்பந்தமாக பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் கோவிட் 19 கையேடு புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி. சீனிவாசன் மற்றும் சென்னை மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை