குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் - ஓடும் பேருந்தில் பரபரப்பு

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் - ஓடும் பேருந்தில் பரபரப்பு
X

பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர். 

சென்னையில், ஓடும் பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில், வண்டலூர் முதல் கோயம்பேடு செல்லும் பேருந்து, இரவு நேரத்தில் வழக்கம் போல், பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மது போதையில் பேருந்தில் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதனால், பயணிகள் குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக வருகிறது.
தகவல் அறிந்த போலீசார், இச்சம்பவம் பற்றி விசாரிக்கின்றனர். தகராறில் ஈடுபட்டவர், தன்னை காவலர் என்று கூறிய நிலையில், அது உண்மையா எனவும், உண்மையெனில், அவர்மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி