வன உயிரின பாதுகாப்பு வார விழா: ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்
வன உயிரின பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் கிண்டி குழந்தைகள் பூங்காவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிண்டி குழந்தைகள் பூங்கா சார்பில் அக்.2 ஆம் தேதி தொடங்கி, 8ஆம் தேதி வரையில் இந்த விழா நடந்தது. வனத்தில் வாழும் உயிரினங்களின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வனவிலங்குகள் அதன் இயற்கை சூழலில் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், வினாடி வினா போட்டியும் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் ஓவியம், வினாடி வினா போட்டியும் மற்றும் இன்றைய கால கட்டத்தில் வன உயிரின பாதுகாப்பின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டியும் நடந்தது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu