தமிழகத்தில் மழை பெய்யுமா, வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழை பெய்யுமா, வானிலை ஆய்வு மையம் தகவல்
X

பைல் படம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யுமா என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தள்ளது.

15.07.2021, 16.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

17.07.2021:நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18.07.2021,19.07.2021: வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

அவலாஞ்சி (நீலகிரி) 10, சின்னக்கல்லார் (கோவை) 9, மேல் பவானி (நீலகிரி) 7, பந்தலூர் (நீலகிரி) 6, செட்டிகுளம் (பெரம்பலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), நாகப்பட்டினம், சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5, விரிஞ்சிபுரம் (வேலூர்) 4, சென்னை மாவட்டாச்சியர் அலுவகம், வடபுடுபட்டு (திருப்பத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), மங்களாபுரம் (நாமக்கல்) , பாலக்கோடு (தர்மபுரி), ஊத்துக்குளி (திருப்பூர்), செந்துறை (அரியலூர்), பெரியாறு (தேனி), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி) தலா 3, அயனாவரம் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை),திருக்கழுக்குன்றம்(செங்கல்பட்டு), மன்னார்குடி (திருவாரூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) சூளகிரி (கிருஷ்ணகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சிராப்பள்ளி) தலா 2, பென்னாகரம் (தர்மபுரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வானுர் (விழுப்புரம்), தர்மபுரி, விழுப்புரம், தக்கலை (கன்னியாகுமரி), காரைக்கால் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல் பகுதிகள்:

15.07.2021 முதல் 17.07.2021 வரை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

அரபிக்கடல் பகுதிகள்:

15.07.2021 , 16.07.2021: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15.07.2021 முதல் 19.07.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!