வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில் பறிமுதல்

வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில் பறிமுதல்
X

கள்ளச்சந்தையில் மது விற்றதான கைதானவர்ளும், பறிமுதல் செய்த மதுபானங்களையும்  காணலாம்.

சென்னை வேளச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பெங்களூரில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து கள்ளச்சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், கார்த்திக்ராஜா (25) , மாஸ் கார்த்திக் (28) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 180 மிலி அளவுள்ள 300 மது பாட்டில்களையும், 51,600 ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!