வேளச்சேரி மறுவாக்குப்பதிவு தொடங்கியது..!

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு தொடங்கியது..!
X

வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வேளச்சேரியில்உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17 ஆம் தேதி (இன்று) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்களர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!