/* */

உகண்டா சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

உகண்டா சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உகண்டா சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாதனை படைத்த தமிழக வீரர்கள்
X

உகாண்டாவில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச பாட்மிண்டன் போட்டி 2020 மகாநாட்டின் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர் வீராங்கனைகள் 8 பேர் இடம்பெற்றனர். போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர் இதில் தமிழக வீரர் வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

இப் போட்டியில் விளையாடிய தமிழ்நாட்டில் ஈரோட்டை சார்ந்த ருத்திக் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.அமுதா கரண் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றனர்.

ரித்திக் மற்றும் கரண் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தினகரன் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம், பிரேம் குமார் வெண்கல பதக்கமும், சத்யா பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ருத்திக் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். சிவராஜன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் சீனிவாசன் நீரைச் வீல்சேர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், சத்யா பெண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இப்போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் ராம சுப்பிரமணியன் ராஜா மற்றும் வீரபத்திரன் விளையாட்டு அரங்க அலுவலர்கள் சுஜாதா, வெங்கடேஷ் ஆகியோர் மற்றும் விளையாட்டு சங்க பிரதிநிதிகள் வீரர் வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On: 24 Nov 2021 7:16 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...