பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவு

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவு
X

யூ - டியூபர் பப்ஜி மதன் ( பைல் படம்)

யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார்.

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ-டியூபில் வீடியோ வெளியிட்ட வழக்கில் மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மதன் ஓராண்டுக்கு ஜாமீன் கோர முடியாது. மேலும் பப்ஜீ மதன் இனி அறிவுரை கழகத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும்.

மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் போலீசார் அறிவுரை கழகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!