கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை டபுள் ஆனது..!
பைல் படம்
சென்னையின் காய்கறித் தேவைகளை பூர்த்தி செய்யும் கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி விலை திடீரென இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.70-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு சாதாரண குடும்பங்களின் வாழ்க்கையை கணிசமாக பாதித்துள்ளது.
வழக்கமாக பண்டிகை காலம் நெருங்கும்போது காய்கறி விலை உயர்வது இயல்பான ஒன்றுதான். இருப்பினும் தற்போதைய விலை உயர்வுக்கு வியாபாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் தக்காளி வியாபாரம் செய்யும் வியாபாரி கிருஷ்ணன் கூறும்போது,
வழக்கமாக சந்தைக்கு வரும் தக்காளி லாரிகள் குறைவாகவே வந்தன. காரணம் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்கிறது. அதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வரத்து குறைந்துள்ளது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் காய்கறி விலையேற்றம் தவிர்க்கமுடியாதது.
நவராத்திரி விழா தொடங்கிவிட்டது. அதனால் விலை காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. மேலும் புரட்டாசி மதம் என்பதால் பலர் அசைவம் உண்பதில்லை. காய்கறி உணவு மேட்டுமே உண்பார்கள். அதனால் காய்கறி தேவை அதிகரித்து விலை அதிகரிக்கிறது.
புரட்டாசி முடியும் வரை இந்த விலை அதிகரிப்பு இருக்கும். பின்னர் படிப்படியா குறைந்துவிடும். தக்காளி விலை கோயம்பேடுக்கு வரத்து அதிகமானால் பாதியாக விலை குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு சந்தையின் முக்கியத்துவம்
கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாகும். 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தையில் 3,100 கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 1,00,000 பேர் வருகை தருகின்றனர். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் இருந்துதான் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu