கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா இருந்தால் ரத்து செய்யப்படும் :அமைச்சர் சேகர்பாபு

கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா இருந்தால்  ரத்து  செய்யப்படும் :அமைச்சர் சேகர்பாபு
X

பைல் படம்

கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா மாறி இருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை தங்கசாலையில் உள்ள சிவசுப்பிரமணி கோயில் வளர்ச்சி பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கமிஷனர் குமரகுருபரன் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு நிருபர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சென்னையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்வெட்டுகள் கோயில்களில் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் கோயில் சொத்துகளை ஆக்கிரமித்து தங்களது பெயர்களில் பட்டா வாங்கி இருக்கிறார்கள்.அவைகள் கண்டறிந்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!