வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற்றது வரவேற்கத்தக்கது: சபாநாயகர்
நாட்டில் உள்ள சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு, சிம்லாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று விட்டு, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டமன்றத்தில் சபாநாயகரின் செயல்பாடு தனிச்சையான முடிவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வந்து பெரும்பான்மை கொண்ட கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராகவும், குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கட்சி எதிர்கட்சியாக வந்து, இணைந்து, ஏகமனதாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் சில தீர்மானங்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படுகிறது.
கவர்னர் தீர்மானத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தீர்மானங்கள் கிடப்பில் உள்ளன. அகில இந்தியா சபாநாயகர்கள் மாநாட்டில் பேசுகின்ற உரிமை இருந்ததால் இந்த கருத்தாக பேசப்பட்டது. ஜனாதிபதிக்கு சட்டத்தை எவ்வளவு காலத்திற்குள் அனுப்ப வேண்டும் என்பது இல்லை. எப்போது கவர்னர் அனுப்புகிறாரோ, அப்போது தான் அனுப்ப முடியும். தீர்மானம் மீது ஆதரவாகவோ எதிராகவோ முடிவு எடுக்கப்பட்டதா என்பதை சொல்லாமல் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
எதற்கு சட்டம் நிராகரிக்கப்பட்டது. சட்டம் ஏன் உடனடியாக தர முடியவில்லை என்ற எந்த விளக்கமும் இல்லை. இவை சபாநாயகருக்கோ ஆளும்கட்சிக்கோ எதிர்கட்சிக்கோ இல்லை. தமிழ்நாட்டில் யார் அதிகாரம் படைத்தது யார் என்றால் மக்கள் தான். மக்கள் போடும் ஒட்டில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கோ தீர்மானத்திற்கோ காலதாமதம் ஏற்படும் போது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தான் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட சபாநாயகருக்கோ, கட்சிக்கோ அல்ல.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்து இருப்பதாக பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 28ந் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு 3 மாதத்தில் பலன் கிடைத்து உள்ளது. இதுபோல் தான், இந்தியாவில் நடந்த சபாநாயகர் மாநாட்டில் தமிழக சட்டபேரவை தலைவர் என்ற முறையில் எடுத்து வைத்த புள்ளி, ஒரு நாள் எல்லோராலும் ஏற்க கூடிய காலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu