சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைப்பு
சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார்
சென்னை விமான நிலையத்தில், ஒமிக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியருக்கான அர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் வெளியிடும் நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் அளித்த பேட்டி: கொரோனா ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியருக்கு, பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி ரேபிட் சோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.3400லிருந்து ரூ.2,900 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆர்டிபிஆர் சோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரேபிட் சோதனை முடிவுகள் வெளியிடும் நேரம், ஒரு மணி நேரத்தில் இருந்து 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் ஆர்டிபிசிஆர் சோதனை நேர முடிவுகள் வெளியிடும் நேரம், 3 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, சோதனை கட்டாயம் என்ற பட்டியலில் இருந்து, சிங்கப்பூர் நாடு நீக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதிக பயணியரிடம் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu