சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு
மாடுகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
கால்நடை விவசாய சங்க மாநில துணைத்தலைவர் துரை நரசிம்மன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதாக கூறிக்கொண்டு தங்கள் வீடுகளில் வாசலில் கட்டி வைத்திருக்கும் மாடுகளை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆலந்தூர் மண்டல அதிகாரிகளிடம் நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல் மாட்டு வண்டியில் ஏற்றினர். அப்போது மாடு தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காயம் ஏற்பட்ட மாட்டிற்கு மருத்துவ வசதி, இழப்பீடுகளை கொடுக்க வேண்டும்.மண்டல அலுவலர் தேர்தல் முடிந்தவுடன் மாட்டு தொழுவங்கள் அமைப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு செல்கின்றோம்.
மாட்டு தொழுவங்கள் அமைத்துக் கொடுத்தால் மாடுகளை சாலையில் சுற்றி திரியாது அதற்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu