குவைத்-சென்னை விமானம் நடுவானில் பறந்தபோது சிகரெட் குடித்த பயணி
குவைத்-சென்னை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,விமானத்திற்குள் சிகரெட் பிடித்து,ரகளை செய்த ஆந்திரா மாநில பயணியை சென்னை விமானநிலைய போலீசாா் கைதுசெய்து விசாரணை.
குவைத்திலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.விமானத்தில் 137 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனா். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த முகமது ஷெரீப் (57) என்பவரும் பயணித்து கொண்டிருந்தாா்.இவா் குவைத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்துவிட்டு,தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்முகமது ஷெரீப் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து,நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் தனது அமா்ந்தபடி புகை பிடிக்கத் தொடங்கினாா்.இதற்கு சக பயணிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.இதையடுத்து விமான பணிப்பெண்கள் வந்து முகமது ஷெரீப்பை கண்டித்து சிகரெட்டை அணைக்க செய்தனா்.ஆனால் முகமது ஷெரீப் சிறிது நேரத்தில் மீண்டும் புகைப்பிடிக்கத் தொடங்கினாா்.அதை கண்டித்த சக பயணிகளையும்,விமான பணிப்பெண்களையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகைப்பிடிக்கும் பயணி பற்றி புகாா் கூறினா்.உடனடியாக விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.உடனடியாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தயாரானாா்கள்.விமானம் சென்னையில் தரையிறங்கியதும்,பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று,புகைப்பிடித்து ரகளை செய்த பயணியை பாதுகாப்புடன் விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதோடு பாதுகாப்புடன் குடியுறிமை சோதனை,சுங்கச்சோதனை ஆகியவைகளை முடித்த பின்பு,விமானநிறுவன அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.
அதன்பின்பு பயணியை சென்னை விமானநிலைய போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனா்.போலீசாா் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu