சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை கட்டணம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை கட்டணம் குறைப்பு
X

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில், நேற்று நள்ளிரவு முதல், ஒமிக்ரான் பரிசோதனை கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் விமான நிலைய ஆணையக அதிகாரிகள் இந்த கட்டண குறைப்பை அறிவித்துள்ளனர்.

அதன்படி, இதுவரை ரூ.3,400 ஆக இருந்த Rapid PCR பரிசோதனைக் கட்டணம், ரூ.500 குறைக்கப்பட்டு, ரூ.2,900 ஆக்கப்பட்டுள்ளது. அதைப்போல் RT-PCR பரிசோதனை கட்டணம் இதுவரை ரூ.700 ஆக இருந்தது.அது ரூ.100 குறைக்கப்பட்டு,ரூ.600 ஆக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்தினம் இந்த பரிசோதனைக்காகன நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டணங்களும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு நிம்மதியை தந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!