கூடுதல் கட்டணம் இல்லை : புதிய செயலியை அறிமுகம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள்..!
கூடுதல் கட்டணம் இல்லை புதிய செயலி(ஆப் )யை அறிமுகம் செய்து ஆட்டோ ஓட்டுனர்கள் அசத்தியுள்ளனர்.
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் Sudesi App-ஐ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Sudesi App- ன் முதன்மைசெயல் அலுவலர் கோபி செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருச்சியில் 800 ஓட்டுநர்கள் 10 ஆயிரம் வாடிக்கையாளர் களுடன் இயங்கி கொண்டிருக்கும் Sudesi App சென்னையில் 10.12.2021 வெள்ளிக்கிழமை முதல் சேவையை தொடங்க இருக்கிறது.
கால் டாக்சி மற்றும் வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபேர் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோன்ற செயலிகள் வெளியானது முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள். இதன் காரணமாகவே Sudesi App-ஐ உருவாக்கும் முன், சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் அக்கவுண்ட் மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான கட்டணத்தில் சேவை வழங்கத் தொடங்கினர். பின்னர் சுதந்திரம் என்ற பெயரை மாற்றி சுதேசி -என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu