வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
சென்னை வேளச்சேரி, தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலையை இணைக்கும் 67 கோடி மதிப்பிலான, 1.028 கி.மீ நீளம் கொண்ட, மேம்பாலத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கடந்த 2016 ம் ஆண்டு முதல் ஈரடுக்கு மேம்பால பணிகள் துவங்கப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாக கட்டப்பட்டது. ஈரடுக்கு மேம்பாலத்தில் ஓரடுக்கு மட்டுமே முடிவடைந்த நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக வேளச்சேரி விஜயநகர் சந்திப்பை கடந்து செல்ல குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களாவது கடந்து செல்ல நேரமாகும். போக்குவரத்து நெரிசலால், ஆனால் தற்போது 5 நிமிடத்திற்குள்ளாகவே செல்ல முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைந்து மற்றொரு பாலத்தையும் திறக்க கோரிக்கை வைக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu