சைதாபேட்டையில் திமுக சார்பில் நல திட்ட உதவிகள், அமைச்சர் சுப்ரமணியன் வழங்கல்

சைதாபேட்டையில் திமுக சார்பில் நல திட்ட உதவிகள், அமைச்சர் சுப்ரமணியன் வழங்கல்
X

சென்னை சைதாபேட்டையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

சைதாபேட்டையில் திமுக சார்பில் நல திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் 140 வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெறச் செய்தமைக்கு அவர் பொதுமக்களிடம் நன்றியும் தெரிவித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் ,

சுமார் 5300 குடும்பங்களுக்கு 1600ரூபாய் மதிப்புள்ள மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருவதாக கூறினார்..

முகசவசம் தான் கொரோனாவுக்கான உடனடி பாதுகாப்பாக அமைகிறது. அதிமுக ஆட்சியில் தரமற்ற முககவசங்களை வழங்கப்பட்டன.

மக்களுக்கு N95, தரமுள்ள துணியால் முககவசம் வழங்குவது தான் பாதுகாப்பானது. எனவே தரமுள்ள இலவச முககவசம் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது விரைவில் வழங்கப்படும்.

மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டம் முன்மாதிரியானது இந்த திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு அதிகாரிகளுடன் நாளை செல்கிறேன் என்று தெரிவித்தார்..

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சி.எஸ்.ஆர் மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவையில் உள்ள 13 எல்லை பகுதியிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்..

மேலும் சார்பாட்டா பரம்பரை படத்தில் விடுபட்ட காட்சி என ஜெயக்குமார் பாக்ஸிங் செய்வது போல் ஒரு வீடியோ வெளிவந்து இருக்கிறது.

சார்பாட்டா படத்தில் வரும் டேன்சிங் ரோஸ் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சமூக வலைதளங்களில் பரவி வருவதாக மா.சுப்பிரமணியம் கிண்டல் செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!