பருவமழை பேரிடர் ஆவதற்கு நாம்தான் பொறுப்பு: கமல்ஹாசன்
மழை பாதிப்புகளை பார்வையிட்ட கமல்ஹாசன்.
சென்னையில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவரை தொடர்ந்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தனித்தனியே ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்த நிலையில், சென்னை மழை பாதிப்புகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆய்வு செய்தார். சென்னை தரமணிக்கு சென்ற கமல்ஹாசன், மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டார். மக்கள் நீதிமய்யம் சார்பில், பொதுமக்களுக்க் உணவுப் பொருட்களை அவர் வழங்கினார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு கமல் அளித்த பேட்டியில், ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதான் பருவமழை. ஆனால், இதனை பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவுதான். அதனால், அரசு மீது தவறு இல்லை என்று கூறவில்லை. அரசு மீதும் தவறு உள்ளது. தனி மனிதர்களுக்கும் பொறுப்புள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தலைக் குற்றமாகக் கருதி நாமும் அதைச் செய்யாமலிருக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu