தொற்று அதிகமாக உள்ள கோவைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக விநியோகம்!

தொற்று அதிகமாக உள்ள கோவைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக விநியோகம்!
X

கோவைக்கு அனுப்பப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள்.

தேவை அதிகரித்துள்ளதால், மும்பையில் இருந்து சென்னை வந்த 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக கோவைக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. தமிழ்நாட்டில் அதிக பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் தற்பொது கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழக அரசு தற்போது கோவை மாவட்டம் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தடுப்பூசிகள் செலுத்துவதை அங்கு அதிகரித்துள்ளது. அதோடு மருத்துவ உபகரணங்களும் அதிகமாக அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்திலிருந்து இன்று சென்னை வந்த சரக்கு விமானத்தில் 143 கிலோ எடையில் 6 ஆக்சிஜன் செறியூட்டிகள் சென்னை விமானநிலையம் வந்தன.

விமான நிலைய அதிகாரிகள், தமிழக அரசு அறிவுறுத்தல்படி அவசரகால அடிப்படையில் அந்த மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து, 6 ஆக்சிஜன் செறியூட்டிகளையும் சென்னையிவிருந்து கோவைக்கு இன்று விமானத்தில் கோவைக்கு அனுப்பி வைத்தனா்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil