வெளிநாட்டு பானங்களை புறக்கணியுங்கள்: வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை

வெளிநாட்டு பானங்களை புறக்கணியுங்கள்: வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை
X

சென்னை வேளச்சேரியில் நடந்த வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வெளிநாட்டு பானங்களை புறக்கணிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக வணிகர் சங்க பாதுகாப்பு பேரவையின் 39வது வணிகர் தினமான மே 5ம் தேதி வணிகர்களின் மாநாடு கூவத்தூரில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை வேளச்சேரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தவைர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடைபெறவுள்ள மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பர்.

மேலும் தற்போது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வணிகர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல்கள் நடைபெறுகிறது. அதை வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை கண்டிக்கின்றது. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் கண்காணித்து பாதுகாக்க வேண்டும். இந்த வருடம் கோடை காலத்தில் விவசாய பொருட்களான இளநீர், நுங்கு, பதநீர் இதுபோன்ற இயற்கை பானங்களுக்கு பொதுமக்களும், வணிகர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். வெளிநாட்டு பானங்களை புறக்கணிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் பெரும்பாலான வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து வருகின்றனர். அதை தமிழக வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என்றார்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்