சென்னை விமானநிைலையத்தில் பெய்த மழை: பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதி

சென்னை விமானநிைலையத்தில் பெய்த மழை:  பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதி
X

சென்னை விமானநிலையத்தில் மழையின் காரணமாக வெளியே செல்ல முடியாமல் தவித்த பயணிகள்.

சென்னை விமானநிைலையத்தில் பெய்து வரும் மழையால் பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் இருந்து பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம், சேலையூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகின்றது.

குறிப்பாகச் சென்னை விமான நிலைய பகுதியில் மழை பெய்து வருவதால் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விமான நிலைய வளாகத்திலேயே நின்றுகொண்டு இருப்பதால் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!