கிண்டி பாம்பு பண்ணை மூடப்படும் நிலை
கொரோனா காரணமாக கிண்டியில் உள்ள 50 வருட பாம்பு பண்ணை பராமரிக்க வருவாய் இன்றி மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு உதவ வேண்டும் என சென்னை பாம்பு பண்ணை டிரஸ்ட் செயல் தலைவர் பால்ராஜ் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கோரிக்கை மனுவில், 1972 ஆம் ஆண்டு பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேக்கர் தலைமையிலான இயற்கை ஆர்வலர் குழுவினால் உருவாக்கப்பட்ட சென்னை பாம்பு பண்ணை டிரஸ்ட் கீழ் இயங்கிவரும் பாம்பு பண்ணை பூங்கா இந்திய அளவில் பிரபலமானது.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பூங்கா மூடப்பட்டதாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கடந்த ஒரு வருடங்களில் மட்டும் ரூபாய் 80 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகளுக்கு உணவு அளிக்க முடியாமலும் சரியாக பராமரிக்க போதிய பணம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கையிருப்பு உள்ள 6 லட்சத்தை வைத்து ஆள் குறைப்பு செய்தும் பணியாளர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிலை தொடர்ந்தால் மேலும் ஒரு மாதம் மட்டுமே சமாளிக்க முடியும்.
பூங்கா டிரஸ்ட் நிர்வாகத்தில் பூங்காவிற்கு பாத்தியப்பட்ட 2.50 ஏக்கர் நிலம் இருந்து வந்தது. இந்த நிலத்தை வனத்துறை டிரஸ்ட்க்கு வழங்கப்பட்ட 1 ஏக்கர் வனத் துறை குத்தகைக்கு தானமாக வழங்கி விட்டது. அதன் தற்போதைய மதிப்பு 50 கோடியை தாண்டும். இந்நிலையில் அதில் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் நல்லெண்ண அடிப்படையில் திருப்பி தர வேண்டி அரசிடம் மனு அளித்துள்ளது. அது திரும்ப கிடைக்கும் பட்சத்தில் பூங்காவின் தற்போதைய நிதி தட்டுப்பாட்டை சரி செய்ய இயலும்.
மேலும் அரசு பாம்பு பண்ணையின் தற்காலிக நிதி பற்றாக்குறையினை போதுமான நிதி வழங்குவதன் மூலம் சுமுகமாக தீர்க்க முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu