தாம்பரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் பங்கேற்பு

தாம்பரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் பங்கேற்பு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

தாம்பரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குறு ,சிறு மற்றும் நடுதர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கலந்து கொண்டனர்.

10 பயனாளிகளுக்கு வழங்கிய பின்னர் மிதமுள்ள பயனாளிகளுக்கு புனித தோமையார் மலை ஒன்றியத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் அதிகாரி ராணியிடம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்து சென்றார்.

இதனையடுத்து பயனாளிகளில் டோக்கன் வழங்குமாறு கேட்ட போது எந்த வித பதலும் அளிக்காமல் வெளியேர முற்பட்டதால் அதிகாரி ராணியை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதில் சிலர் அதிகாரி ராணி தங்களிடம் 2,000 முதல் 4,000 வரை பணம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்