சென்னை விமானநிலையத்தில் தங்கம் கடத்திய 2 பயணிகளை சுங்கத்துறையினா் கைது

சென்னை விமானநிலையத்தில் தங்கம் கடத்திய 2 பயணிகளை சுங்கத்துறையினா் கைது
X
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய 2 பயணிகளை சுங்கத்துறையினா் கைது செய்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.47 லட்சம் மதிப்புடைய 1.06 தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை. துபாயிலிருந்து ஏா்இந்தியா விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுடைய சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பாாத்து சோதனையிட்டனா். துணிகளுக்கிடையே 2 மின்சார டிரான்ஸ்பாா்மா்களை மறைத்து வைத்திருந்தனா். சுங்கத்துறையினா் அந்த டிரான்ஸ்பாா்மா்களை எடுத்து கழற்றி பாா்த்தனா். அவைகளுள் 2 தங்க செயின்கள்,8 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தனா். அந்த தங்க செயின்கள், தங்கக்கட்டிகளின் மொத்த எடை 1.06 கிலோ. அதன் சா்வதேச மதிப்பு ரூ.47 லட்சம். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா்,கடத்தல் பயணிகள் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!