மோசடி ஆவணங்கள் பதிவு: 3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்

மோசடி ஆவணங்கள் பதிவு:  3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்
X
கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பதிவாளர்களும், நீலாங்கரை சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட பதிவாளர் செல்வகுமார், ஈரோடு மாவட்ட பதிவாளர் பெரியசாமி, நீலாங்கரை சார்பதிவாளர் சரவணக்குமார் ஆகியோர் மோசடி ஆவணங்கள் பதிவு செய்ய உதவியதாகவும், ஆவணங்கள் பதிவுக்கான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் புகார்கள் வந்தன.

அவர்களின் தவறான நடவடிக்கையால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து, துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், புகார்கள் உண்மை என தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future